ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மது போதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய இயக்குநர்.. கார் பறிமுதல்!

மது போதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கிய இயக்குநர்.. கார் பறிமுதல்!

இயக்குநர் கல்யாண்

இயக்குநர் கல்யாண்

நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி, நடிகைகள் ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான ஜாக்பாட் ஆகிய தமிழ் படங்களை இயக்கியவர் திரைப்பட இயக்குநர் கல்யாண்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மது போதையில் கார் ஓட்டிய திரைப்பட இயக்குநர் கல்யாண் மீது  போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான குலேபகாவலி, நடிகைகள் ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான ஜாக்பாட் ஆகிய தமிழ் படங்களை இயக்கியவர் திரைப்பட இயக்குநர் கல்யாண்.

இவர் நேற்று இரவு ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை சேமியர் சாலை சந்திப்பு அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் இயக்குநரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது சோதனையில் இயக்குநர் கல்யாண் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டுவது தவறு என அறிவுரை வழங்கிய போக்குவரத்து போலீசார் அவரது காரை பறிமுதல் செய்து தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சொன்றனர்.

Also read... "விக்கி நயன் ஜோடியிடம் தேவைப்பட்டால் விசாரணை.. ஒரு வாரத்தில் அறிக்கை" வாடகைத் தாய் விவகாரம் குறித்து அமைச்சர் தகவல்

இன்று காலை அனைத்து ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் இயக்குநர் கல்யாணிடம் தெரிவித்தனர். இதனை அடுத்து வேறொரு வாகனத்தில் இயக்குநர் கல்யாண் அப்பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News, Entertainment