Home /News /entertainment /

The Tomorrow War: எதிர்கால ஏலியன்களுடன் போரிடும் நிகழ்கால மனிதர்கள்!

The Tomorrow War: எதிர்கால ஏலியன்களுடன் போரிடும் நிகழ்கால மனிதர்கள்!

த டுமாரோ வார்

த டுமாரோ வார்

திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்து எடுத்ததால் படம் பிரமாண்டமாகவே இருக்கிறது. பூமியை தாக்கும் ஏலியனை ஒயிட்ஸ்பைக்ஸ் என்கிறார்கள்.

தி டுமாரோ வார் என்கிற பெயரில் படத்தின் பாதி கதை அடங்கிவிடுகிறது. ஏலியன் என்பதை சேர்த்தால் அதுதான் மொத்த கதை.

2022-ல் ஃபுட்பால் வேர்ட் கப் மேட்ச் நடக்கையில் திடீரென வானத்தில் உருவாகும் ஒளியிலிருந்து துப்பாக்கி சகிதம் கொஞ்சம் பேர் இறங்கி வருகிறார்கள். பொதுவாக இப்படி ஏலியன்கள்தான் வரும். அமெரிக்கர்கள் அவற்றை அழித்து உலகை காப்பாற்றுவார்கள். இதில் கொஞ்சம் மாற்றம். வந்தது 2051-ஐ சேர்ந்த மனிதர்கள். அதாவது 30 வருடங்கள் முந்தைய எதிர்காலத்தைச் சேர்ந்தவர்கள். 'ஏலியன்கள் மூன்று வருஷமா உலகத்தை அழிச்சிட்டு இருக்கு. இன்னும் சில நாள்களில் மொத்த மனித குலமே அழிஞ்சிடும். நீங்க உதவினால்தான் உண்டு' என்கிறார்கள். போர் பயிற்சி எடுத்தவர்கள் என்றில்லை. கரண்டி பிடித்த செஃப் முதல், சாகக்கிடக்கிற கிழவிவரை பலரும் எதிர்காலத்துக்குப் போகிறார்கள். ஏலியனை அழித்து அவர்களால் உலகை காப்பாற்ற முடிந்ததா என்பதே தி டுமாரோ வார்.

இந்தப் படத்தை பாராமவுண்ட் சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவில் திரையரங்கில் வெளியிட தயாரித்தது. கோவிட் 19 காரணமாக அமேசானுக்கு அதே 200 மில்லியன் டாலர்களுக்கு கைமாற்றியது. அவர்கள் கடந்த 2 ஆம் தேதி படத்தை உலகம் முழுவதும் ஓடிடியில் வெளியிட்டனர்.

திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்து எடுத்ததால் படம் பிரமாண்டமாகவே இருக்கிறது. பூமியை தாக்கும் ஏலியனை ஒயிட்ஸ்பைக்ஸ் என்கிறார்கள். தோற்றத்தில் ஏலியன் படத்தில் வருவது போலவே இருக்கிறது. எக்ஸ்ட்ரா பிட்டிங்காக விரல்கள் இல்லாத இரண்டு கைகள். அதன் நுனியிலிருந்து சர்ரென்று உள்ளங்கையளவு ஈட்டிமுனை போன்ற ஆயுதத்தை வீசுகிறது. அது ஒன்றுதான் அதனிடம் இருக்கும் ஒரே ஆயுதம். எதிர்காலத்துக்கு செல்லும் நாயகன் அங்கு தனது மகளை சந்திக்கிறான். சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகாமல் சொதப்புகி[றது. போரிடுவது ஆண் ஒயிட்ஸ்பைக்ஸ், பெண்களை அவை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்பதும், கடலில் அவை கூட்டமாக பாய்ந்து முன்னேறுவதும் தி கிரேட் வால் படத்தை (அங்கு நிலம், இங்கு கடல்) ஞாபகப்படுத்துகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாயகனின் எதிர்கால பயணம் தோல்வியில் முடிந்த பிறகு எப்படி ஏலியன்களை சாகடிக்கப் போகிறான், மகளை எப்படி காப்பாற்றுவான் என்ற ட்விஸ்ட் சுவாரஸியம். ஆனால், பல நூறு வருஷமா ஒயிட்ஸ் பைக்ஸ் இங்கதான் இருக்கு என்று ஒரு லேப் டாப்பில் அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் போது சப்பென்றாகிறது.

நாயகனாக வரும் கிரிஷ் ப்ரட்டுக்கு சண்டையிடுவது தவிர அதிக வேலையில்லை. அவரது அப்பாவாக வரும் சிமன்ஸ் திறமையான நடிகர். அவரையும் வீணடித்திருக்கிறார்கள். சாம் ரிச்சர்ட்சன் அவ்வப்போது புன்னகைக்க வைக்கிறார். எதிர்காலத்துக்கு செல்வதை ஜம்ப்லிங்க் என்கிறார்கள். வார்ம் ஹோல் மாதிரி. காமெடியாக இருக்கிறது. எதிர்காலத்துக்கு சென்றவர்கள் ஆகாயத்திலிருந்து விழுகையில் அதிலேயே பாதி பேர் செத்துப் போகிறார்கள், உட்காந்து யோசித்திருக்கலாமேப்பா.

ஹாலிவுட் பலமுறை சவைத்துப் போட்ட சக்கைதான் கதை. பலவீனமான திரைக்கதையில் சரடுவிட்டிருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற படங்களில் கதையும், திரைக்கதையுமா முக்கியம்? ஸீஜி வொர்க்கும், ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பாக இருந்தால் போதுமே. அந்த வகையில் படம் முக்கால் கிணறு தாண்டியிருக்கிறது. வீக் என்டில் பாப்கார்ன் கொறித்தபடி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட ஏற்ற படம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி