Home /News /entertainment /

தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த திரையரங்க உரிமையாளர்கள்!

தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த திரையரங்க உரிமையாளர்கள்!

திரையரங்க உரிமையாளர்கள்

திரையரங்க உரிமையாளர்கள்

திரைப்பட விமர்சனங்களை மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் கோரிக்கைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆதரவளிப்பதாகவும் கூறினர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தயாரிப்பாளர்கள் புதிய திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகு ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதன் பின் அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பத்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் தயாரிப்பாளர்கள் தங்களின் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓ.டி.டி வெளியிட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.

4 வாரங்களில் புதிய திரைப்படங்கள் ஓ.டி.டியில் வெளியிடப்படுவதால் திரையரங்குகளுக்கு ரசிகர்களின் வருகை குறைந்துவிட்டது எனவும் தெரிவித்தனர்.



அதேபோல் பெரிய திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்ற பொதுப்பணித்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்கும் வகையில் மாற்றம் செய்து கொடுக்கு வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Also read... திரையரங்குகளில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

மேலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து சினிமா தற்போது மீண்டு வருவதாகவும்,  இந்த நிலையில் சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வு  பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் திரையரங்குகளின் பராமரிப்பு செலவை 4  ரூபாயில் இருந்து உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக சாதாரண திரையரங்குகளுக்கு 5 ரூபாய் எனவும், ஏ/சி திரையரங்குகளுக்கு 10 ரூபாய் எனவும் மாற்றி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழில் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், யானை, சீதா ராமம்  உள்ளிட்ட படங்கள் லாபகரமாக அமைந்தன எனவும் திரையரங்க உரிமையாளர்கள் கூறினர்.

மேலும் விமர்சனங்களை மூன்று நாட்களுக்கு பிறகு வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் ஆதரவளிப்பதாகவும் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Theatre

அடுத்த செய்தி