• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 8 மொழிகளில் வெளியாகும் பிரபாஸின் 25 வது படம்...!

8 மொழிகளில் வெளியாகும் பிரபாஸின் 25 வது படம்...!

பிரபாஸ்

பிரபாஸ்

நாக் அஸ்வின் படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது அவரது 25 வது படம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பான் - இந்தியா திரைப்படம் என தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். சிலர் இதனுடன் மலையாளம், கன்னடத்தைச் சேர்த்து ஐந்து மொழிகளில் வெளியிடுகின்றனர். பிரபாஸின் 25 வது படம் எட்டு மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்படும் நடிகரானார். 150 கோடிகளுக்கு குறைவாக அவரை வைத்து படம் எடுக்க முடியாது என்பதே இப்போதைய நிலை. பாகுபலிக்கு அடுத்து ஓவர் பில்டப்புடன் எடுத்த சாஹோ ஓடவில்லை. ஆனாலும், பல்வேறு உரிமைகளின் மூலம் தயாரிப்பாளர் தப்பிப்பிழைத்தார்.

பிரபாஸ் நடிப்பில் அடுத்து ராதே ஷ்யாம் திரைப்படம் 2022 ஜனவரியில் வெளியாகிறது. மொத்தம் 5 மொழிகளில் இதனை வெளியிடுகின்றனர்

அதையடுத்து சலார் திரைப்படம் வெளியாக உள்ளது. கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

அதையடுத்து புராணப் படமான ஆதிபுருஷ். இதுவரை பிரபாஸ் நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் என்கிறார்கள்.

Also read... வலிமை அஜித்தின் அட்டகாசமான புகைப்படங்கள்...!

ஆதிபுருஷை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்தப் படம் குறித்து வரும் தகவல்கள் ஆதிபுருஷ் படத்தை தூக்கிச் சாப்பிடுவது போல் உள்ளது. இந்தப் படத்தில் நடிப்பவர்களின் சம்பளம் மட்டுமே 200 கோடிகள் வரும் என பயமுறுத்துகின்றனர். இந்தப் படத்துக்கு புராஜெக்ட் கே என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர்.

நாக் அஸ்வின் படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது அவரது 25 வது படம். பூஷன் குமாரின் டி சீரிஸும், பத்ரகாளி பிக்சர்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஜாப்பனிஷ், கொரியன், சைனீஷ் ஆகிய எட்டு மொழிகளில் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: