Home /News /entertainment /

இனி வரும் காலம் மிஷ்கினுடையது - மிஷ்கினை வாழ்த்திய பிசாசு 2 கேமரா மேன்!

இனி வரும் காலம் மிஷ்கினுடையது - மிஷ்கினை வாழ்த்திய பிசாசு 2 கேமரா மேன்!

மிஷ்கினை வாழ்த்திய பிசாசு 2 கேமரா மேன்

மிஷ்கினை வாழ்த்திய பிசாசு 2 கேமரா மேன்

சமீபத்தில் வெளியான பிசாசு 2 படத்தின் டிரைலர் இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. வழக்கமாக மிஷ்கின் படங்களில் சிறப்பம்சமாக இருக்கும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இந்த டிரைலரிலும் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இனி வரும் காலம் மிஷ்கினுடையது என்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் மிஷ்கின் என பிசாசு 2 படத்தின் கேமரா மேன் சிவா சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    2014 -ம் ஆண்டு வெளிவந்த பிசாசு திரைப்படத்தின் தொடர்ச்சியாக  பிசாசு 2 என இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  இந்த திரைப்படத்தை ராக்போர்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்திருக்கிறார்.

    ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜ்மல் உள்ளிட்டவர்களோடு விஜய் சேதுபதியும் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பிசாசு 2 படத்தின் டிரைலர் இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. வழக்கமாக மிஷ்கின் படங்களில் சிறப்பம்சமாக இருக்கும் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் இந்த டிரைலரிலும் சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து இருந்தனர்.



    இந்நிலையில் நேற்று இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்த சிவா சாந்தகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் மிஷ்கினின் பிறந்த நாள் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,



    இனி வரும் காலம் மிஷ்கினுடையது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் மிஷ்கின்.

    பூசி மெழுகிப் பேசுவதும், பொய்யான வார்த்தைகளால் போற்றிப் புழுகுவதுமே நாகரீகம் என நம்பும் உலகில் பூசி மெழுகவதையும் பொய்யாக போற்றுவதையும் வளர்ச்சிகான தடை என உறுதியாக நம்பும் ஒரு உன்னதமான படைப்பாளியின் பிறந்ததினம் இன்று.

    காலத்தை முந்திச் சிந்திப்பதாலும் செயற்படுவதாலும் பித்தன் என்றும் சைக்கோ என்றும் பெயெரெடுத்த ஒரு தமிழ்ச் சினிமா ஆசானின் பிறந்ததினம் இன்று.

    மாஸ்டர் மிஷ்கின்!

    இந்த இனிய நாளில் நான் உறுதியாகவும் உரத்தும் சொல்ல நினைப்பது...

    இனி வரும் காலம் மிஷ்கினுடையது.

    இனி வரும் காலம் மிஷ்கினுடையது.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் மிஷ்கின்

    ஏனெனில்...

    தமிழ் சினிமா மாற்றம் காணத் தொடங்கிவிட்டது, அல்லது அது மாற்றத்துக்கு ஆளாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



    ஏனெனில்...

    தமிழ் சினிமா இரசிகர்கள் மாறிவிட்டார்கள். மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

    வரப்புயர நீருயரும்

    நீருயர நெல்லுயரும்

    நெல்லுயரக் குடியுயரும்

    குடியுயரக் கோலுயரும்

    கோலுயரக் கோனுயர்வான்

    தமிழ் சினிமா இரசிகர்கள் உலகின் உன்னத சினிமாக்களை தரிசிக்கவும் இரசிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.

    இனிமேல் மிஷ்கின் உலக சினிமாக்களை உதாரணம் காட்டிப் பேசவும் தேவையில்லை மேதாவி என பெயர் எடுக்கவும் வேண்டியதில்லை. தமிழ் சினிமா இரசிகர்களே அதைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். தமிழ் சினிமாவை உலகின் உன்னத சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் போலிச் சினிமாக்களை நிராகரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

    Also read... Soori: நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை

    அக்கிரா குரோசோவாவையும் அல்பிரெட் ஹிட்ச்ஹொக் ஐயும் மேற்கோள்காட்டி இனி மிஷ்கின் எந்த மேடையிலும் பேச வேண்டியதில்லை. எந்த பேட்டியிலும் கதைக்க வேண்டியதில்லை. ஏனெனில் அக்கிரா குரோசோவாவையும் அல்பிரெட் ஹிட்ச்ஹொக் ஐயும் தமிழ் சினிமா இரசிகர்கள் அறியத் தொடங்கிவிட்டார்கள்.

    நட்சத்திர நடிகர்கள், மாஸ் ஹீரோக்களையும் மிஷ்கின் அவமதிக்கிறார் என இனி யாரும் சொல்ல வேண்டியிருக்காது. ஏனெனில் தமிழ் சினிமா இரசிகர்களே தம் அபிமான ஹீரோக்களைத் அவமதிக்கவும் உண்மையான உன்னதமான நடிகர்களை கொண்டாடவும் தொடங்கிவிட்டார்கள்

    ஆம், மிஷ்கினின் சினிமா பற்றிய சிந்தனைகளோடும் கோட்பாடுகளுடனும் ஒத்ததாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா,

    தன் மீதான விமர்சனங்கள் அவதூறுகள் எதையும் கணக்கில் எடுக்காது எதற்காக் உரத்தும் உயர்த்தியும் குரல் கொடுத்து வந்தாரோ அதற்கான மாற்றங்கள் அதற்கான முன்னெடுப்புகள் தமிழ் சினிமாவில் நடைபெறத் தொடங்கியுள்ளன.

    ஆகவேதான் மீண்டும் சொல்கிறேன்...

    இனிவரும் காலம் மிஷ்கினுடையது.

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் மிஷ்கின்.

    அன்புடன்
    சிவா சாந்தகுமார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Director mysskin, Entertainment

    அடுத்த செய்தி