முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திரையுலகை ஆச்சரியப்படுத்திய மாநாடு மூன்றாவது நாள் வசூல்

திரையுலகை ஆச்சரியப்படுத்திய மாநாடு மூன்றாவது நாள் வசூல்

சிம்பு

சிம்பு

மாநாடு படத்தின் மூன்றாவது நாள் சூல் தயாரிப்பாளர், திரையுலகினர் என அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு பல பிரச்சனைகளை கடந்து நவம்பர் 25 ஆம் தேதி வெளியானது. டைம் லூப் திரைக்கதையில் அமைந்த கதையை எந்த சிக்கலும் இல்லாத தெளிவான காட்சிகளில் விறுவிறுப்பாக படமாக்கியிருந்தார் வெங்கட்பிரபு. எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் படத்துக்கு ப்ளஸ் பாயின்டாக அமைந்தன. படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

மாநாடு படம் தமிழகத்தில் முதலிரு தினங்களில் 14 கோடிகளை வசூலித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். அதாவது ஒரு நாள் சராசரி வசூல் 7 கோடிகள். மூன்றாவது நாளான சனிக்கிழமை எட்டு கோடிகளை படம் வசூலித்துள்ளதாக சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். அதாவது முதலிரு தினங்களின் சராசரியைவிட மூன்றாவது நாள் வசூல் அதிகம். முதல் மூன்று தினங்களில் தமிழக திரையரங்குகளில் 22 கோடிகள் வசூலித்த முதல் சிம்புப் படம் இது என்பது முக்கியமானது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அடை மழையிலும் பல திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன. ஏழு கோடிகளை தாண்டும் என்பது கணிப்பு. இன்று மதியத்துக்குள் நான்காவது நாளின் வசூல் தெரிந்துவிடும். மாநாடு படத்திற்கு ரசிகர்கள் அளித்துவரும் வரவேற்பு குறையவில்லை. சிம்புவின் திரைவாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக மாநாடு அமையும் என்பது நிச்சயம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Simbu, Venkat Prabhu