முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பொங்கலுக்கு வெளியாகும் பிரபுதேவா படம்...!

பொங்கலுக்கு வெளியாகும் பிரபுதேவா படம்...!

தேள்

தேள்

கார்பன், நாய் சேகர், கொம்பு வச்ச சிங்கம்டா, என்ன சொல்ல போகிறாய், மருத, ஏஜிபி ஆகிய படங்கள் ஜனவரி 13, 14 ஆம் தேதிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபுதேவாவின் தேள் படமும் பொங்கல் ரேசில் கலந்து கொண்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபுதேவா நடித்திருக்கும் தேள் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 திரைக்கு வருகிறது.

கொரோனா பெருந்தொற்று அதிகரித்து, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பொங்கலையொட்டி வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் படங்கள் தங்களின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளன. இதன் காரணமாக சின்ன பட்ஜெட் படங்கள் பெருவாரியாக பொங்கலையொட்டி வெளியாகின்றன.

கார்பன், நாய் சேகர், கொம்பு வச்ச சிங்கம்டா, என்ன சொல்ல போகிறாய், மருத, ஏஜிபி ஆகிய படங்கள் ஜனவரி 13, 14 ஆம் தேதிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரபுதேவாவின் தேள் படமும் பொங்கல் ரேசில் கலந்து கொண்டுள்ளது.

இந்தப் படத்தை ஹரிகுமார் இயக்க, பிரபுதேவா, சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ஈஸ்வரிராவ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சி.சத்யா இசையமைத்துள்ளார். ஆக்ஷன் படமான இதனை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது.

Also read... தனுஷின் வாத்தி படத்திலிருந்து வெளியேறிய நாயகி...?

Also read... பொங்கல் வெளியீட்டிலிருந்து கடைசி பெரிய படமும் பின்வாங்கியது...!

சென்ற வருடம் ஒருமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன இந்தப் படம் ஜனவரி 14 திரைக்கு வருகிறது. இதன் ரன்னிங் டைம் 1 மணி 55 நிமிடங்கள். பொங்கலுக்கு வெளியாகும் பிற படங்களின் ரன்னிங் டைம்...

கார்பன் - 1 மணி 55 நிமிடங்கள்

நாய் சேகர் - 2 மணி 13 நிமிடங்கள்

கொம்பு வச்ச சிங்கம்டா - 2 மணி 31 நிமிடங்கள்

என்ன சொல்ல போகிறாய் - 2 மணி 13 நிமிடங்கள்

மருத - 2 மணி 37 நிமிடங்கள்

ஏஜpபி - 1 மணி 47 நிமிடங்கள்

First published:

Tags: Prabhu deva