ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரெடியான பா.ரஞ்சித்.. அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகும் விக்ரம்! தொடங்கியது டெஸ்ட் ஷூட்

ரெடியான பா.ரஞ்சித்.. அடுத்தப் பாய்ச்சலுக்கு தயாராகும் விக்ரம்! தொடங்கியது டெஸ்ட் ஷூட்

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணி

விக்ரம் - பா.ரஞ்சித் கூட்டணி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படத்திற்கான டெஸ்ட் சூட் இன்று நடைபெற்று வருகிறது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான பூஜை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

கோலார் தங்க வயல் வரலாற்றை மையமாக வைத்து அந்த திரைப்படம் உருவாகவுள்ளது.  இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் பட குழுவினர் படப்பிடிப்பிற்கு தயாராகியுள்ளனர்.  அதில் முதல் கட்டமாக சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் விக்ரம் பங்கு பெறும் டெஸ்ட் சூட் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து படத்திற்கான படப்பிடிப்பை, ஆந்திர மாநிலத்தில் வரும் 18ஆம் தேதிக்குப் பிறகு தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Also read... வசூலில் கொடிகட்டி பறக்கும் பொன்னியின் செல்வன் - தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா?

விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Pa. ranjith