Home /News /entertainment /

இன்று மாலை வெளியாகிறது விஷாலின் லத்தி பட டீசர்!

இன்று மாலை வெளியாகிறது விஷாலின் லத்தி பட டீசர்!

லத்தி பட டீசர்

லத்தி பட டீசர்

லத்தி திரைப்படத்தில் விஷால் 10 வயது சிறுவனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.  அதேபோல் அவரின் மனைவியாக சுனைனா நடித்திருக்கிறார். 

  • News18
  • Last Updated :
    விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

    அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

    ஒரு சாதாரண காவலர்  பயணம் மற்றும் அவர் சந்திக்கும் பிரச்சனையை மையமாக வைத்து லத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

    இதற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் லத்தி திரைப்படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

    Also read... மதுரையில் நடிகர் சிம்புவிற்கு 1000 அடியில் பேனர் வைத்த ரசிகர்கள்

    லத்தி திரைப்படத்தில் விஷால் 10 வயது சிறுவனுக்கு தந்தையாக நடித்துள்ளார்.  அதேபோல் அவரின் மனைவியாக சுனைனா நடித்திருக்கிறார்.  விஷாலின் முந்தைய திரைப்படங்களில் இருந்து லத்தி திரைப்படம் சற்று மாறுபட்டு இருக்கும் என்றும், கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது எனவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor vishal, Entertainment

    அடுத்த செய்தி