Home /News /entertainment /

சிங்கம் அண்ணாமலை ஐ.பி.எஸ்... அரபியின் டீசர் வெளியானது!

சிங்கம் அண்ணாமலை ஐ.பி.எஸ்... அரபியின் டீசர் வெளியானது!

அண்ணாமலை

அண்ணாமலை

2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஸ்வாஸின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கிறார்.

  • News18
  • Last Updated :
    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட திரைப்படமான அரபியின் டீசர் வெளியாகியுள்ளது.

    தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. கரூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்த இவர், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். அந்த பதவியை ராஜினாமா செய்த அவர் பின்னர் பாஜக-வில் இணைந்தார். தற்போது தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    அண்ணாமலை, தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி அவர் அரபி என்கிற கன்னட படத்தில் நடித்துள்ளார்.

    Also read... கமல்ஹாசனின் விக்ரம் படம் தமிழகத்தில் இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

    2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஸ்வாஸின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கிறார்.





    இந்நிலையில் அண்ணாமலையின் இந்த முதல் படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி இருக்கிறது. இதில் சிங்கம் அண்ணாமலை ஐ.பி.எஸ். என்ற டைடிலுடன் புல்லட்டில் அவர் எண்ட்ரி கொடுத்து உள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Annamalai, Entertainment

    அடுத்த செய்தி