முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / செல்வராகவனின் பகாசூரன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்வராகவனின் பகாசூரன் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்வராகவனின் பகாசூரன்

செல்வராகவனின் பகாசூரன்

இன்று வெளியிடப்பட்டிருக்கும் முதல் பார்வையில் செல்வராகவன் ருத்ராட்சை மாலை அணிந்து நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் டீசர் ஞாயிற்றுக்கிழமை வெளியாகிறது.

இயக்குநர் செல்வராகவன் சாணி காகிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார்.  அதேசமயம் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

இந்த நிலையில் திரௌபதி,  ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கத்தில் பகாசூரன் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் முதல் பார்வையை பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.  அத்துடன் பகாசூரன் படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி காலை 10:10 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கின்றனர்.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் முதல் பார்வையில் செல்வராகவன் ருத்ராட்சை மாலை அணிந்து நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான முதல் இரண்டு திரைப்படங்களும் குறிப்பிட்ட சமூகத்தின் பின்னணியில் எடுக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

Also read... இந்தியன்-2 படத்தை வரவேற்கும் விதமாக எதுகை மோனை வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

இந்த நிலையில் அவரின் மூன்றாவது படமான பகாசூரனும் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. மேலும் இன்று வெளியிட்டுள்ள முதல் பார்வை பதிவில் பகை முடிக்க வருகிறான் என்ற வாசகத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director selvaragavan, Entertainment