முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வெளியானது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

வெளியானது நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ்

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் முதல் பாடலை இந்த மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடலை இந்த மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து அந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

அந்தப் படத்தில் வடிவேலுவுடன் ரெட்டின் கிங்ஸ்லி, சிவாங்கி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா முயற்சித்து வருகிறது. இதையடுத்து இந்த மாத இறுதியில் இருந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பிரபல படுத்தும் வேலைகளில் இறங்கின்றனர்.

Also read... குழந்தைகளை கவரவே மைடியர் பூதம் படத்தில் மீசையின்றி நடித்தேன் - பிரபுதேவா!

அதில் முதல்கட்டமாக சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள பாடலை வெளியிட உள்ளனர். அதில் எந்தப் பாடலை முதலில் வெளியிடுவது என்ற யோசனையில் படக்குழுவினர் உள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை வடிவேலு பாடியுள்ளார். அதில் ஒரு பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். அந்தப் பாடல் நகைச்சுவை வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vadivelu