பிங்க்-ஐ விட நேர்கொண்ட பார்வை படத்தின் ரன்னிங் டைம் அதிகரிக்க என்ன காரணம்?

ரீமேக்காக இருக்கும் பட்சத்தில், இரு படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசப்படுவது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

news18
Updated: July 26, 2019, 3:15 PM IST
பிங்க்-ஐ விட நேர்கொண்ட பார்வை படத்தின் ரன்னிங் டைம் அதிகரிக்க என்ன காரணம்?
நேர்கொண்ட பார்வை
news18
Updated: July 26, 2019, 3:15 PM IST
பிங்க்கை விட நேர்கொண்ட பார்வை படத்தின் ரன்னிங் டைம் அதிகரிக்க காரணம் என்ன என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார்.


படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில்  பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தின் ரன்னிங் டைம் 158.11 நிமிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிங்க் படத்தின் ரன்னிங் டைம் 136 நிமிடங்கள் தான். ரீமேக்காக இருக்கும் பட்சத்தில், இரு படங்களின் ரன்னிங் டைம் வித்தியாசப்படுவது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

Loading...

இந்நிலையில், பிங்க் படத்தை காட்டிலும் நேர்கொண்ட பார்வை படத்தில் சண்டை காட்சிகள், பாடல்கள் அதிகம் உள்ளதால் ரன்னிங் டைமில் வித்தியாசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Also see...

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...