முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குலுகுலு படத்தின் மாட்னா காலி பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

குலுகுலு படத்தின் மாட்னா காலி பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

மாட்னா காலி

மாட்னா காலி

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எனவே பாடல்களும் பின்னணி இசையும் கவனம் பெறும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சந்தானம் நடித்துள்ள குலுகுலு படத்தின் மாட்னா காலி என்ற முதல் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

மேயாத மான், ஆடை படங்களில் இயக்கியவரும்,  மாஸ்டர், விக்ரம் திரைப்படங்களின் வசனகர்த்தாவுமான  ரத்னகுமார் தற்போது ‘குலுகுலு’ படத்தை இயக்கியுள்ளார்.

சந்தானம் நாயகனாக நடித்துள்ள அந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகிறது. நகைச்சுவை பின்னணியில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்  வெளியிடுகிறது.

சந்தானம் நடித்துள்ள குலு குலு படத்தை தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எனவே பாடல்களும் பின்னணி இசையும் கவனம் பெறும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

Also read... உலகத்தில் முதலாவதாக தமிழன் எதையும் செய்யக்கூடாது என்று தமிழனே நினைக்கிறான் - பார்த்திபன்

சமீபத்தில் குலுகுலு திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் வெளியான டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் மாட்னா காலி மாட்ரவர ஜாலி என்ற முதல் லிரிக்கல் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Santhanam