Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக விநியோக வியாபாரம் இழுபறி!

பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக விநியோக வியாபாரம் இழுபறி!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

சினிமா வியாபாரத்தில் தயரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மத்தியில் விநியோகஸ்தர்கள் இருப்பார்கள்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக விநியோக வியாபாரம் இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா வியாபாரத்தில் தயரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மத்தியில் விநியோகஸ்தர்கள் இருப்பார்கள்.

ஒரு திரைப்படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து பெற்று திரையரங்குகளில் திரையிட விநியோகஸ்தர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் மூலமே பெரும்பாலான திரைப்படங்கள் திரையிடப்படும்.

அந்த விநியோகஸ்தர்கள் Out Right, Minimum Guarantee, Distribution ஆகிய மூன்று முறையை வியாபாரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
இதில் Out Right என்பது தயரிப்பாளர், குறிப்பிட்ட தொகைக்கு விநியோகஸ்தரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு படத்தை விற்பனை செய்து விடுவார். அதன் பின் வெளியீட்டில் வரும்  லாபம் மற்றும் நஷ்டம் அனைத்தும் விநியோகஸ்தரை சார்ந்தது.

Distribution முறை என்பது ஒரு விநியோகஸ்தர் தயாரிப்பாளரின் படத்தை திரையிட்டு கொடுப்பார். அதில் வரும் ஷேர் தொகையில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சதவீத தொகையை எடுத்துகொண்டு மீதத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவார்.
இறுதியாக Minimum Guarantee முறையில் படத்தை வெளியிடுவார்கள்.

இதில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து படத்தை பெற்றுகொள்வார்கள். வெளியீட்டிற்கு பின் ஷேர் தொகையில் தான் கொடுத்த பணத்தை விநியோகஸ்தர்  எடுத்துகொள்வர். அதற்கு மேல் உள்ள தொகையில், செலவு மற்றும் கமிஷன் தொகையை கழித்துவிட்டு மீதம் இருக்கும் தொகையை விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் சரிசமமாக பிரித்துகொள்வார்கள்.

இதில் பொன்னியின் செல்வன் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் Distribution அடிப்படையில் வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் மணிரத்னம் அந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அதாவது லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்கு மத்தியில் 70% - 30% ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் மணிரத்னம் Out Right முறையில் படத்தை கொடுத்து பணத்தை பிரித்துகொள்ளலாம் என நினைக்கிறார். இதன் மூலம் தங்களுக்கு ரிஸ்க் இருக்காது எனவும் எண்ணுகிறார்.

ஒருவேளை Distribution அடிப்படையில் படத்தை விற்பனை செய்தால் ஷேர் தொகையில் 8% வரை ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கமிஷன் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு 50 கோடி ஷேர் தொகை கிடைத்தால், அதில் 4 கோடியை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கமிஷனாக எடுத்துகொள்ளும். மீதம் உள்ள தொகையில் லைகா 70% (₹32.2 கோடி) மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் 30% (₹13.8 கோடி) என பிரித்துகொள்ள வேண்டும். இதில் ஒரு வேளை அதிக லாபமும் கிடைக்கலாம் அல்லது நஷ்டமும் ஏற்படலாம்.

Also read... மாமன்னன் படத்திற்கு பெரும் உழைப்பை கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் அன்பும் ப்ரியமும் - மாரி செல்வராஜ்

ஆனால் மணிரத்னம் Outright முறையில் படத்தை கொடுத்து ஒப்பந்தப்படி பணத்தை பிரித்துகொள்ளலாம் என நினைக்கிறார்.
இந்த ஒரு குழப்பதால் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக உரிமை இன்னும் முடிவகமால் உள்ளது.

மேலும் படத்தின் First Copy-ஐ தயார் செய்துவிட்டு இது குறித்து பேசி முடிக்கலாம் என்ற முடிவில் உள்ளார் மணிரத்னம். தமிழக விநியோக உரிமம் இறுதியாகாத நிலையில் ஓவர்சீஸ், ஆந்திரா, கர்நாடகா, வட இந்தியா வியாபாரங்களை லைகா முடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lyca, Mani rathnam, Ponniyin selvan

அடுத்த செய்தி