Home /News /entertainment /

தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர்...!

தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர்...!

டாக்டர் படம்

டாக்டர் படம்

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் டாக்டர் படத்தை ஒளிபரப்புகின்றனர். 

  • News18
  • Last Updated :
சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் டாக்டர் திரைப்படம் தீபாவளிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

தொலைக்காட்சியில் நடிகர்கள் தோன்றினால் ரசிகர்கள் படம் பார்க்க வரமாட்டார்கள் என தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கவோ, நிகழ்ச்சி நடத்தவோ நடிகர்களுக்கு ஒருகாலத்தில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி பேட்டிக் கொடுத்தார் என்று கமலுக்கு அபராதமும் நடிகர்கள் சங்கம் விதித்தது. அது ஒருகாலம்.

பிறகு, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை நம்பி படம் எடுக்க ஆரம்பித்தனர். இப்போது திரையரங்கு உரிமையாளர்கள் முறுக்கிக் கொண்டனர். ஒரு படம் வெளிவந்து 3 வருடங்களுக்குப் பிறகே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்றனர். பிறகு 3 மாதங்களில் ஒளிபரப்பினர். ஓடிடி வந்து அனைத்தையும் கலைத்துப் போட்டதில், பல படங்கள் திரையரங்குகளுக்குப் பதில் நேரடியாக தொலைக்காட்சியிலேயே ஒளிபரப்பானது

Also read... உலகம் முழுவதும் 90 கோடி வசூலித்த டாக்டர் படம் - சிவகார்த்திகேயனின் வளர்ச்சிப்பாதை!

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெற்றிகரமாக 3 வது வாரத்தை கடந்து போய்க் கொண்டிருக்கிறது. வரும் 28 ஆம் தேதிதான் கேரளாவில் படத்தை வெளியிடுகின்றனர். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் டாக்டர் படத்தை ஒளிபரப்புகின்றனர்

இதுவே வேறொரு படமாகவோ, தொலைக்காட்சியாகவோ இருந்தால் திரையரங்கு உரிமையாளர்கள் வரிந்துக்கட்டி போராட்டத்தில் இறங்கியிருப்பார்கள். இப்போது படத்தை ஒளிபரப்புவது சன் தொலைக்காட்சி. இவர்களின் அண்ணத்த படம் அதே தீபாவளி அன்று திரைக்கு வருகிறது.

டாக்டரை தீபாவளிக்கு வெளியிடுவது குறித்து கேள்வி கேட்டால் அண்ணாத்த படம் அவர்களுக்குக் கிடைக்காது. அதனால், உரிமைக்குரலை தற்காலிகமாக கைவிட்டு அண்ணாத்தயின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Deepavali, Diwali festival, Sivakarthikeyan, Sun TV

அடுத்த செய்தி