மனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கை...! தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் கதை என்ன?

வாழ்க்கையின் கடைசி நாட்களில் உள்ள வாட்ச்மேன் கருப்புசாமியை அவரது மகன் எவ்வாறு கவணித்துக்கொள்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கரு.

news18
Updated: August 10, 2019, 12:22 PM IST
மனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கை...! தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் கதை என்ன?
பாரம் படத்தின் போஸ்டர்
news18
Updated: August 10, 2019, 12:22 PM IST
மனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கையே தமிழில் தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் கதை.

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் பட்டியல்  மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான பிரிவில் பாரம் திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. பாரம் படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஏற்கனவே தேர்வாகியிருந்தது.


பிரியா கிருஷ்ணமூர்த்தி


பாரம் என்றால் தமிழில் சுமை என்ற மற்றொரு அர்த்தமும் உள்ளது. மனைவியை இழந்த நைட் வாட்ச்மேனின் வாழ்க்கையே இந்த பாரம் படத்தின் கதை.

வாழ்க்கையின் கடைசி நாட்களில் உள்ள வாட்ச்மேன் கருப்புசாமியை அவரது மகன் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கரு.

Loading...

வீட்டில் வயது முதிர்ந்து தங்களது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதியவர்களை அவர்களது வீட்டில் உள்ளவர்களால் கவனித்துக்கொள்ள முடியாத நிலையில் தலைகூத்தல் என்ற பெயரில் நிறைய வயதானவர்கள் அவர்களின் குடும்பதினர்களால் கொல்லப்படுகின்றனர்.

இது இன்னும் சில கிராமங்களில் நடைமுறையிலேயே உள்ளது. இந்த தலைகூத்தலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பாரம். இந்த படத்தில் வயது முதிர்ந்த வாட்ச்மேன் தந்தைக்கு தலைக்கூத்தல் செய்கிறார் அவரது மகன்.

பிரியா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.

Also see...

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...