Home /News /entertainment /

கார்த்தி - அருண் ராஜா படத்துக்கான கதை விவாதம் பணி தொடங்கியது

கார்த்தி - அருண் ராஜா படத்துக்கான கதை விவாதம் பணி தொடங்கியது

கார்த்தி - அருண்ராஜா

கார்த்தி - அருண்ராஜா

கார்த்தி - அருண்ராஜா கூட்டணியில் உருவாகும்  திரைப்படத்திற்கு பொன். பார்த்திபன் வசனம் எழுதுகிறார்.

  • News18
  • Last Updated :
கார்த்தி நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள படத்திற்கான கதை விவாத பணிகள் தொடங்கியுள்ளன.

கனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் கார்த்தி நடிப்பில் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த சமயத்தில் கார்த்தி வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அருண்ராஜா காமராஜ் ஆர்டிகல் 15 திரைப்படத்தை நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்.

அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியில் பாராட்டைப் பெற்றது.  இதையடுத்து தற்போது கார்த்தி படத்தின் வேலைகளில் மீண்டும் இறங்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். அந்தப் படத்திற்கான கதை விவாத பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதிலும் ஹார்பர் அதை சுற்றி கதை களம் அமைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also read... விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தை 400 திரையரங்குகளில் வெளியிட முயற்சி!

கார்த்தி - அருண்ராஜா கூட்டணியில் உருவாகும்  திரைப்படத்திற்கு பொன். பார்த்திபன் வசனம் எழுதுகிறார்.  இந்தப் பணிகள் தற்போது தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். நடிகர் கார்த்தி ராஜூமுருகன் இயக்கும் படத்தை முடித்தவுடன் அருண்ராஜா காமராஜ் படத்தில் இணைய உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi

அடுத்த செய்தி