• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீஸ்ட் படத்தின் அரங்கு...!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீஸ்ட் படத்தின் அரங்கு...!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீஸ்ட் படத்தின் அரங்கு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீஸ்ட் படத்தின் அரங்கு

பீஸ்டில் அபர்ணா தாஸ், செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய்யின் பீஸ்ட் படத்துக்காக போடப்பட்ட அரங்கை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. பிறகு சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர். சென்னை புறநகரில் உள்ள ஸ்டுடியோவில் இந்த அரங்கு அமைக்கப்பட்டிருந்தது

சென்னையில் கொட்டித்தீர்த்த பருவமழை பீஸ்ட் படத்திற்காக போட்ட அரங்கையும் விடவில்லை. அரங்கைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. படத்தின் நாயகி பூஜா ஹெக்டே படப்பிடிப்புக்காக சென்னை வந்திருக்கும் நேரத்தில் இது நடந்துள்ளது முக்கியமானது.

Also read... 7 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு திரும்பிய ஹனி ரோஸ்...!



அரங்கைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் அரங்குக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால், வெள்ளம் வடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்டில் அபர்ணா தாஸ், செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்

பீஸ்ட் படக்குழு மீண்டும் ஜார்ஜியா சென்று சில காட்சிகளை படமாக்க இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கதைப்படி இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் காட்சிகளையே ஜார்ஜியாவில் எடுத்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றனஅடுத்த வருடம் பீஸ்ட் திரைக்கு வருகிறது.  

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: