• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடி முடிவை உறுதி செய்த மோகன்லால் பட தயாரிப்பாளர்...!

ஓடிடி முடிவை உறுதி செய்த மோகன்லால் பட தயாரிப்பாளர்...!

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லாலின் மலைக்கார் திரைப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றிய கதையிது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கியிருக்கும் மரைக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் படம் ஓடிடியில் வெளியாவதை படத்தின் தயாரிப்பாளர் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.

மோகன்லாலின் மலைக்கார் திரைப்படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றிய கதையிது. வெள்ளையர்களுக்கு எதிராக முதல் கப்பல் படையை அமைத்தவர் இந்த மரைக்கார். மோகன்லாலுடன் சுனில் ஷெட்டி, அர்ஜுன், முகேஷ், மஞ்சு வாரியர், சுஹாசினி, கல்யாணி, ப்ரணவ் நடித்துள்ளனர். ஏராளமான ஆங்கில, சீன நடிகர்களும் படத்தில் பணியாற்றியுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் ரசிகர்களை திரையரங்குகளுக்கு கொண்டுவரும் மாய வலையாக இந்தப் படத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நம்பினர்.

அதற்கேற்ப ஆகஸ்ட் 12 படம் வெளியாவதாகவும், முதல் 25 தினங்களுக்கு மரைக்கார் திரைப்படத்தை மட்டும் திரையிடுவது எனவும் முடிவானது. கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக, ஆகஸ்டில் திரையரங்குகள் திறப்பது தள்ளிப்போனது. தற்போது திரையரங்குகள் திறந்திருக்கும் நிலையில் முன்பு பேசியதைவிட குறைந்த தொகையே தர முடியும் என திரையரங்குகள் கூற, வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தந்து படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடும் முடிவை படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் எடுத்தார்

Also read... விக்ரம் படத்தின் இசை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்...!

இந்தப் பிரச்சனையில் அரசு சார்பில் அமைச்சர் ஷாஜி செரியன் பேச்சுவார்த்தை நடத்தினார். திரையரங்கு உரிமையாளர்களும், ஆண்டனி பெரும்பாவூரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்தும் தோல்வியில் முடிய, மரைக்காரின் ஓடிடி வெளியீட்டை நேற்று ஆண்டனி பெரும்பாவூர் உறுதி செய்தார். அமேசான் பிரைம் வீடியோவுடன் அவர் ஒப்பந்தம் செய்து, கையெழுத்தும் இட்டுள்ளார்

கிறிஸ்துமஸை முன்னிட்டு படம் அமேசானில் வெளியாக வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: