ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... வெளியானது சூப்பர் அப்டேட்!

வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... வெளியானது சூப்பர் அப்டேட்!

வாரிசு, துணிவு

வாரிசு, துணிவு

துணிவு திரைப்படம் தமிழகத்தில் 11-ம் தேதி இரவு ஒரு மணிக்கு திரையிடப்படுகிறது. வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படும். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி இரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்படுகிறது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இந்த நிலையில் இரண்டு படங்களுக்கான முதல் காட்சி எப்போது என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

மேலும் இது குறித்து படக் குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்த்து இருந்தனர். அதில் வாரிசு திரைப்படத்தின் விநியோகஸ்தர் லலித் குமார் விஜய் படத்தை இரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட திட்டமிட்டார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு காட்சி திரையிட வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்கள் படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர்.  அதேபோல் காவல்துறையினரும் ரசிகர்களுக்குள் ஏற்படும் மோதலை தவிர்க்கும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான சிறப்பு காட்சியையும் திராவிட வேண்டாம் என வாய்மொழி உத்தரவிட்டிருந்தனர்.

இதனால் எந்த திரைப்படம் இரவு ஒரு மணிக்கு திரையிடப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

அத்துடன் தங்கள் முடிவை திரையரங்க உரிமையாளர்களுக்கும் கொடுத்து விட்டனர்.  இதனால் நாளை இரவு முதல் சிறப்பு காட்சிகளுக்கான முன்பதிவும் மற்ற காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கின்றனர்.

Also read... கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜுக்கு வெற்றியை தந்த 1994 பொங்கல் படங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Thunivu, Varisu