பிரசாந்த் நடிப்பில் அவர் தந்தை தியாகராஜன் இயக்கிய அந்தகன் படத்தின் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற முன்னணி நடிகர்கள் பலர் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அந்த ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கினார்.
‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரஷாந்த்தின் தந்தையான தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.
Also read... ஏய் சண்டக்காரி... நடிகை ரித்திகா சிங்கின் நியூ லுக் - வைரலாகும் போட்டோஸ்
மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்தகன் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் முன்னதாக வெளியான முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது "யோசிச்சி யோசிச்சி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.