• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எஸ்.பி.பி. பாடிய அண்ணாத்த பாடல் அக். 4 வெளியாகிறது...!

எஸ்.பி.பி. பாடிய அண்ணாத்த பாடல் அக். 4 வெளியாகிறது...!

அண்ணாத்த

அண்ணாத்த

அண்ணாத்த படம் சிவா இயக்கத்தில் ரஷானி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அண்ணாத்த படத்துக்காக பாடிய பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது. 

ரஜினி படங்களில் அவரது அறிமுகப் பாடலை பெரும்பாலும் பாலசுப்பிரமணியமே பாடுவார். பூஜை போட்டு படத்தை தொடங்குவது போல், அதுவொரு சடங்காகவே இருந்தது. பாட்ஷாவில் வரும் நான் ஆட்டோக்காரன்..., முத்துவின் ஒருவன் ஒருவன் முதலாளி..., அருணாச்சலத்தில் வரும் அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான்தாண்டா... எல்லாம் எஸ்.பி.பி. ரஷானிக்காக பாடிய அறிமுகப் பாடல்கள்.

அண்ணாத்த படத்துக்கும் ரஜினிக்காக பாடியுள்ளார் எஸ்.பி.பி. அந்தப் பாடலை அக்டோபர் 4 மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அண்ணாத்த படம் சிவா இயக்கத்தில் ரஷானி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றன. படம் தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது

Also read... முடிவுக்கு வந்த இழுபறி - தீபாவளிக்கு வெளியாகிறது எனிமி!

சில தினங்கள் முன்பு, அண்ணாத்த தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் எழுதின. தேதி மாறிப்போகலாம் என ஆரூடம் தெரிவித்திருந்தன. ஆனால், அவை வெறும் வதந்தி என்பதை இந்த அறிவிப்பின் மூலம் சன் பிக்சர்ஸ் உணர்த்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: