• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • The Sinner - யூகிக்க முடியாத சைக்கலாஜிகல் த்ரில்லர்!

The Sinner - யூகிக்க முடியாத சைக்கலாஜிகல் த்ரில்லர்!

தி சின்னர்

தி சின்னர்

முதல் சீஸனில் வரும் ஹாரி அம்புரோஸ் கதாபாத்திரம் மட்டும் இரண்டாவது சீஸனிலும் தொடர்ந்தது.

 • Share this:
  தி சின்னர் ஒரு சைக்கலாரிகல் த்ரில்லர். யுஎஸ்ஸில் தயாரானது. கோரா என்கிற இளம்பெண் தன்னுடைய கணவன், குழந்தையுடன் ஏரிக்கரையோரம் இருக்கையில், இளம் ஜோடியை பார்க்கிறாள். அவர்கள் முத்தமிட்டு வேடிக்கையாக விளையாட, திடீரென கோரா அவனை கத்தியால் குத்தி சாகடிக்கிறாள்.

  அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவளுக்கேகூட முன்பின் தெரியாத அவனை ஏன் கொன்றோம் என்பது புரியவில்லை. கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறவள், செய்த கொலையை ஒப்புக் கொண்டு தண்டனைக்கு தயாராகிறாள்.

  காவல்துறை அதிகாரி ஹாரி அம்புரோஸுக்கு மட்டும் இந்த வழக்கு வினோதமாகப்படுகிறது. கோராவிடம் ஏதோ ரகசியம் இருப்பதாக சந்தேகிக்கிறார். அவள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதை புரிந்து கொள்கிறாள். நடந்த சம்பவத்துக்கும் கோராவின் வாழ்க்கைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என விசாரணையில் இறங்குகிறார்.

  அதனைத் தொடர்ந்து, கோராவின் வாழ்க்கையின் மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பிக்கின்றன. அவளுக்கு திருமணத்துக்கு முன் இருந்த காதல், அதன் மூலம் ஏற்பட்ட கர்ப்பம் என பல விஷயங்கள் தெரிய வருகின்றன. . கோராவின் கணவன், கோராவின் முன்னாள் காதலனை ஒருபுறம் தேட, ஹாரி அம்புரோஸ் இன்னொருபுறம் விசாரணை மேற்கொள்ள, கோராவே அறியாத அவளது வாழ்க்கையின் ரகசியங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வருகின்றன.

  தி சின்னர் முதல் சீஸன், போரடிக்காத விறுவிறுப்பான தொடர். சீரான இடைவெளியில் திருப்பங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. கோராவின் தாய் தனது இளைய மகளின் உடல் சுகவீனத்துக்கு மூத்த மகள் கோராவின் பாவங்களே காரணம் என்று அந்த சிறுமியை கடவுளின் பெயரால் தண்டிக்கும் பால்யகால பிளாஷ்பேக் காட்சிகள் அதிர்ச்சியானவை. மத நம்பிக்கையின் அசாதாரணமான வன்முறையை சொல்பவை. ஹாரி அம்புரோஸும் கோராவைப் போலவே மன அழுத்தத்துக்கு ஆளானவர் என்ற இணைக்கதை அந்த கதாபாத்திரத்துக்கு குழப்பமான சித்திரத்தை தந்து, கோரா வாழக்கில் அவர் காட்டும் ஆர்வத்துக்கு நியாயம் செய்கிறது.

  The Sinner, the sinner cast, the sinner season 3 cast, the sinner season 1, the sinner season 3, the sinner season 1 episode 1, the sinner season 3 episode 1, the sinner netflix, the sinner season 2
  தி சின்னர்


   

  குறிப்பிட்ட பாடலை கேட்கையில் கோராவிடம் ஏற்படும் மாறுதல், அவள் தன்னிலை இழக்கையில், எப்படி ஏழுமுறை கத்தியால் குத்தினாளோ, அதையே மீண்டும் அச்சு பிசகாமல் செய்வது என பல்வேறு விஷயங்களை அழகாக கோர்த்து கதையையும், த்ரில்லையும் தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்கள். கோராவின் சகோதரி கதாபாத்திரம் இன்னொரு சிறப்பம்சம். பொதுவாக இதுபோன்ற கதாபாத்திரங்களை நொய்மையாக சித்தரிப்பதே வழக்கம். மாறாக, கோராவுக்கு செக்ஸை பற்றி அந்த கதாபாத்திரம்தான் சொல்லித் தருகிறது. அவளை எல்லைகளைத் தாண்டிப்போக நிர்ப்பந்திக்கிறது.

  1999-ல் வெளியான தி சின்னர் நாவலைத் தழுவி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டது. எட்டு எபிசோடுகள் கொண்ட மினி சீரிஸாக எடுப்பதே அவர்கள் திட்டம். 2017-ல் இது வெளியான போது தயாரித்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்பு கிடைக்க, இதனை ஆந்தாலஜியாக கொண்டுவர முடிவு செய்தனர். தி சின்னர் இரண்டாவது சீஸன் எடுக்கப்பட்டது. முதல் சீஸனில் வரும் ஹாரி அம்புரோஸ் கதாபாத்திரம் மட்டும் இரண்டாவது சீஸனிலும் தொடர்ந்தது. இரண்டாவது சீஸன் வரவேற்பைப் பெற மூன்றாவது சீஸனை எடுத்தனர். மூன்றுமே தனித்தனி கதைகள். மூன்றுமே சைக்கலாஜிகல் த்ரில்லர் ஜானரை சேர்ந்தவை. மூன்றிலும் ஹாரி அம்புரோஸே வழக்கை விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிப்பார்.

  The Sinner, the sinner cast, the sinner season 3 cast, the sinner season 1, the sinner season 3, the sinner season 1 episode 1, the sinner season 3 episode 1, the sinner netflix, the sinner season 2
  தி சின்னர்


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஹாரி அம்புரோஸாக பில் புல்மேன் நடித்துள்ளார். அலட்டாத நடிப்பு. நல்ல மேக்கிங். யூகிக்க முடியாத திருப்பங்கள். த்ரில்லர் பட விரும்பிகளுக்கு தி சின்னர் நல்ல தேர்வு. நான்காவது சீஸன் அக்டோபரில் வெளியாகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: