ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இணையத்தில் வைரலாகும் சூர்யா - 42 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ!

இணையத்தில் வைரலாகும் சூர்யா - 42 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ!

சூர்யா - திஷா பதானி

சூர்யா - திஷா பதானி

படக்குழு சமீபத்தில் கோவா ஷெட்யூலை முடித்த நிலையில், அடுத்ததாக சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் சூர்யா மற்றும் திஷா பதானி நடிக்கும் சூர்யா - 42 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெய்பீம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு சூரரைப்போற்று படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டது.

அடுத்தடுத்த வெற்றிகள் குவிந்து வருவதால் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இடையே வாடிவாசல் படத்திற்காக சூர்யா காளையுடன் பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் வெளியிடப்பட்டன.

இதனை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வந்தார். தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் ஆகிய படங்களின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Also read... தடுமாற்றத்தில் சிவகார்த்திகேயனின் மாஸ் ஹீரோ இமேஜ்

சூர்யா மற்றும் திஷா பதானி நடித்து வரும் சூர்யா 42 படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன்போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த படத்தை சிவா இயக்குகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் 2 பாகங்களாக தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

படக்குழு சமீபத்தில் கோவா ஷெட்யூலை முடித்த நிலையில், அடுத்ததாக சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் படத்தைப் பற்றி மேலும் தகவல்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் தற்போது படப்பிடிப்பில் சூர்யா மற்றும் திஷா பதானி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya