ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கியது மோகன்ராஜாவின் லூசிபர் ரீமேக்!

இயக்குநர் மோகன் ராஜா

ராம் சரணும், என்வி பிரசாத்தும் இணைந்து தயாரிக்க இன்று காலை லூசிபரின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இன்று ஹைதராபாத்தில் ஆக்ஷன் காட்சியுடன் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் மோகன்ராஜா.

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜின் இயக்கத்தில் வெளியான படம் லூசிபர். அரசியல் படமான இது பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படமாகும். படம் மெகா ஹிட். 100 கோடிகளை தாண்டி வசூலித்தது. அப்போதே லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை  ராம் சரண் வாங்கினார். அவரது தந்தை சிரஞ்சீவியை நடிக்க வைப்பதாக திட்டம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராம் சரணும், என்வி பிரசாத்தும் இணைந்து தயாரிக்க இன்று காலை லூசிபரின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இயக்கம் மோகன்ராஜா. இன்று முதல் காட்சியாக சண்டைக் காட்சி ஒன்றை எடுக்கின்றனர். ஸ்டன்ட் ஸில்வா சண்டைக் காட்சியை அமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்

Also read... சூர்யா படத்தால் கமலின் விக்ரம் படப்பிடிப்பு பாதிப்பு?



பெற்றோர்கள் மற்றும் நலம்விரும்பிகளின் ஆசிர்வாதத்தால் அடுத்தப் பயணத்தை தொடங்கியிருக்கிறேன். இந்தமுறை பெரிய ஒன்று, அற்புதமான அணியுடன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள மோகன்ராஜா, ஸ்டன்ட் ஸில்வா, நீரவ் ஷா, புரொடக்ஷன் டிஸைனர் சுரேஷ் ராஜன் ஆகியோருடன் இருக்கும் செல்பி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published: