Home /News /entertainment /

உறியடி விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

உறியடி விஜயகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சேத்துமான் இயக்குநருடன் இணையும் விஜயகுமார்

சேத்துமான் இயக்குநருடன் இணையும் விஜயகுமார்

உறியடி பட நாயகன் விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடஙகியது. 60 நாட்களில் படத்தை முடிக்க திட்டம். 

  • News18
  • Last Updated :
    உறியடி படத்தின் நாயகன் விஜயகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

    2016 ஆம் ஆண்டு வெளியான உறியடி திரைப்படம் விமர்சனம் ரீதியில் பெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தை விஜயகுமார் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார்.  அதற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு உறியடி-2 திரைப்படத்தை எடுத்தார். ஆனால் முதல் பாகம் போன்று இரண்டாம் பாகம் வெற்றியடையவில்லை.

    இந்த நிலையில் சின்ன இடைவேளை எடுத்துக்கொண்ட விஜயகுமார், தற்போது சேத்துமான் படத்தின் இயக்குனர் தமிழுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அது கிராமத்துப் பின்னணியில் அரசியல், ஆக்சன், கலந்த குடும்ப பங்கான திரைப்படமாக உருவாக உள்ளது.



    Also read... தி கிரே மேன் படத்திலிருந்து வெளியானது தனுஷின் மாஸ் சண்டைக்காட்சி!

    இதற்கான படப்பிடிப்பை ஒரே கட்டமாக 60 நாட்களில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதில் விஜயகுமாருடன் ப்ரீத்தி அசரானி, திலீபன், பாவேல் நவகீதன், மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அதேபோல் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment

    அடுத்த செய்தி