ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியது சூர்யா - 42 படக்குழு!

மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியது சூர்யா - 42 படக்குழு!

சூர்யா - 42

சூர்யா - 42

‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. 

பாலா படத்தில் இருந்து விலகிய சூர்யா, இயக்குனர் சிவாவின் படப்பிடிப்பில் கவனம் செலுத்துகிறார். ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சூர்யா-42 படம் சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பின் கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அதை முடித்துகொண்டு சென்னை திரும்பிய படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான வேலைகளை செய்துவந்தனர்.

அதேசமயம் சூர்ய இல்லாத காட்சிகள் சில படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சூர்யா-42 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள EVP ஸ்டுடியோவில் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

Also read... சிவாஜியும், ரஜினியும் இணைந்து நடித்த முதல் படம் எது தெரியுமா?

அதில் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டோர் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார், வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல் இந்தப் படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப், இது ஃபேன்டஸி கதையை மையமாகக் கொண்ட படம் என்றும் ஆயிரம் வருடத்துக்கு முன்பும் தற்போதைய காலகட்டத்திலும் கதை நடப்பது போல உருவாக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Suriya, Director siva