Home /News /entertainment /

24-ம் தேதி தொடங்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு!

24-ம் தேதி தொடங்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு!

இந்தியன் - 2

இந்தியன் - 2

இந்தியன்-2 திரைப்படத்தில் கமல்ஹாசனை தவிர நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் நடிக்கின்றனர். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இந்தியன் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 24-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

இயக்குநர் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் தொடங்கப்பட்ட  திரைப்படம் இந்தியன்-2.  இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு ஆந்திர பகுதிகளில் தொடங்கியது. அதன் பிறகு சென்னை அருகே உள்ள ஈ.வி.பி ஸ்டுடியோவில் அரங்கம் அமைத்து படமாக்கினார் ஷங்கர். அந்தப் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட மூன்று பேர் மரணம் அடைந்தனர். அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை.

அதற்கு லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. அத்துடன் இந்தியன்-2 திரைப்படத்தை முடிக்காமல் இயக்குநர் ஷங்கர் வேறு எந்த திரைப்படத்தையும் இயக்கக் கூடாது என தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இறுதியாக ஷங்கர் மற்றும் லைகா தரப்பிற்கு இடையே சுமுகம் முடிவு எடுக்கப்பட்டது. இதனால் இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 24 ஆம் தேதி முதல் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

Also read... Thiruchitrambalam Movie Review: தனுஷின் திருசிற்றம்பலம் படம் விமர்சனம்!

அதில் கமல்ஹாசன் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்குகின்றனர்.  அதன்பிறகு விரைவில் கமல்ஹாசன் படப்பிடிப்பில் இணைவார் என தகவல் கிடைத்துள்ளது.

இந்தியன்-2 திரைப்படத்தில் கமல்ஹாசனை தவிர நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் நடிக்கின்றனர்.  ஏற்கனவே 70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. எனவே மீதமிருக்கும் 30 சதவீத காட்சிகளை விரைவில் முடிக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director Shankar, Kamal Haasan, Lyca

அடுத்த செய்தி