Home /News /entertainment /

செப்டம்பரில் தொடங்குகிறது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்!

செப்டம்பரில் தொடங்குகிறது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அந்தப் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் பங்கேற்கிறார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. 

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.  அதிலும் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே, அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெயரை திருச்சிற்றம்பலம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 30 கோடி ரூபாய் ஷேர் வசூல் கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இதையடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன், வாத்தி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Also read... ஹேப்பி பர்த்டே நாகர்ஜூனா: குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்

இந்த நிலையில் தற்போது சிறிய ஓய்வில் இருக்கும் நடிகர் தனுஷ், விரைவில் கேப்டன் மில்லர் படத்தில் இணைய உள்ளார். அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ராக்கி, சாணிக் காகிதம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கு உள்ளார். அதேபோல் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush, Entertainment

அடுத்த செய்தி