Home /News /entertainment /

பூஜையுடன் தொடங்கியது தனுஷின் கேப்டன் மில்லர் படம்!

பூஜையுடன் தொடங்கியது தனுஷின் கேப்டன் மில்லர் படம்!

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது.  இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளனர். இந்த திரைப்படம் 1930 காலகட்டத்தில் நடப்பது போன்று படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



Also read... தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்த திரையரங்க உரிமையாளர்கள்!

இதில் இடம்பெறும் தனுஷின் கதாபாத்திரத்தின் தோற்றமும் மிக வித்தியாசமாக இருக்கும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.  இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று தொடங்கப்பட்டிருக்கும் கேப்டன் மில்லர் படம் அடுத்த ஆண்டு வெளியாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dhanush

அடுத்த செய்தி