ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் எப்போது... விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் எப்போது... விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!

லோகேஷ் - விஜய்

லோகேஷ் - விஜய்

இந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அதேபோல் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் அந்த திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67ஆவது படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான பூஜை சென்னையில் அண்மையில் நடைபெற்றது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். அதேபோல் விஜயின் மேலாளர் ஜெகதீஷ் அந்த திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக இணைகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் இந்த திரைப்படத்திலும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. அத்துடன் மும்பை சார்ந்த கேங்ஸ்டர் வகையில் இந்த திரைப்படத்தை அவர் எடுக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் ஹாலிவுட் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் உரிமையையும் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். எனவே அந்த திரைப்படத்தின் சாயலும், விஜய் 67 இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, பட குழுவினர் காஷ்மீர் செல்கின்றனர் என கூறப்படுகிறது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர்.

லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர், விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டாகியுள்ளதால் தளபதி 67 படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Also read... ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்ற 'The Elephant Whisperers’ திரைப்படம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj