Home /News /entertainment /

சர்தார் படத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த கார்த்தி

சர்தார் படத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்த கார்த்தி

கார்த்தி

கார்த்தி

சர்தார் திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.  அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர். 

  • News18
  • Last Updated :
சர்தார் திரைப்படத்தின் கார்த்தி இடம்பெறும்  காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றது. 

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ். மித்திரன் தற்போது சர்தார் படத்தை இயக்கி வருகிறார். அதில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அத்துடன் தந்தை - மகன் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் அவர் வருகிறார்.  இதற்கான படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் படத்தின் கார்த்தி இடம் பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு திங்கள் கிழமையிடன்  முடிவடைந்துள்ளது.  அதைத் தொடர்ந்து சில காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை இயக்குனர் பி.எஸ். மித்ரன் தொடங்கியுள்ளார்.

Also read... விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா?

அப்போது கார்த்தி மற்றும் பி.எஸ்.மித்திரன் பேசிக்கொண்ட வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் "நாலு பேருக்கு நல்லது பண்ணாலும் அதை நாற்பதாயிரம் பேருக்கு தெரியிற மாதிரி பண்ணனும்" என்று கார்த்தி பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது.



சர்தார் திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.  அதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர்.  சர்தார் திரைப்படத்தில் கார்த்தி உடன் ராஷி கண்ணா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Karthi, Entertainment

அடுத்த செய்தி