ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பூஜையுடன் தொடங்கியது ஹன்சிகா படத்தின் ஷூட்டிங்!

பூஜையுடன் தொடங்கியது ஹன்சிகா படத்தின் ஷூட்டிங்!

ஹன்சிகாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

ஹன்சிகாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா,  தற்போது ஆர்.கண்ணன் இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹன்சிகா - மெட்ரோ சிரிஷ் இணைந்து நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது. 

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகா,  தற்போது ஆர்.கண்ணன் இயக்கம் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஜெயம் கொண்டான்,  கண்டேன் காதலை,  சேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது சொந்த நிறுவனம் தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.  அந்த வகையில் இந்த திரைப்படத்தையும் அவர் தயாரித்து இயக்குகிறார்.

எமோஷனல் ஹாரரை  அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.  இதற்காக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார்.  அதேசமயம் இயக்குநர் ஆர்.கண்ணன் மற்றும் பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ் ஆகியோரும் திரைக்கதையில் பணியாற்றியுள்ளனர்.

Also read... ரோலெக்ஸ் எப்போ வரும்... நடிகர் சூர்யா கூறிய தகவல் - வைரலாகும் வீடியோ!

ஹன்சிகா நடிக்கும் இந்த திரைப்படத்தில் மெட்ரோ படத்தின் நாயகன் சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறர். அவர்களை தவிர, மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இன்று தொடங்கியுள்ள அந்த படத்தை மூன்று மாதங்களில் முடிக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனர்.  ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக எந்த புதிய திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Hansika