• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18 முதல்  ‘எங்க வீட்டு மீனாட்சி’ நெடுந்தொடர்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18 முதல்  ‘எங்க வீட்டு மீனாட்சி’ நெடுந்தொடர்!

எங்க வீட்டு மீனாட்சி

எங்க வீட்டு மீனாட்சி

பிரபல பேச்சாளரும், நடிகருமான ஞானசம்பந்தம், இந்நிகழ்ச்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அக்டோபர் 18 முதல் ஆரம்பமாகு  ‘எங்க வீட்டு மீனாட்சி’ நெடுந்தொடர்.

    அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிற புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மீனாட்சி’ - இன் புதிய புரொமோவை கலர்ஸ் தமிழ் வெளியிட்டிருக்கிறது.

    இந்நிகழ்ச்சியின் முதல் இரு புரொமோ மக்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியதற்குப் பிறகு, இதன் சிறப்பான கதை மற்றும் சித்தரிப்பை பார்வையாளர்கள் காண்பதற்காக ஒரு முன்னோட்டத்தை இந்த சேனல் இப்போது அவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

    அத்துடன், இந்த சிறப்பான குடும்ப கதையம்சம் கொண்ட நிகழ்ச்சி 2021 அக்டோபர் 18ம் தேதியன்று இரவு 7 மணிக்கு முதன்முறையாக தனது ஒளிபரப்பை தொடங்குகிறது என்ற தகவலையும் அது வெளியிட்டிருக்கிறது. பிரபல பேச்சாளரும், நடிகருமான ஞானசம்பந்தம், இந்நிகழ்ச்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.





     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvtamil)






    அழகான நகரமான காரைக்குடியை பின்புலமாகக் கொண்டிருக்கும் இந்த புதிய புரொமோ, கல்லூரியில் சந்திக்கிற ஒரு அழகான பேராசிரியையான மீனாட்சி (ஶ்ரீதா சிவதாஸ் நடிப்பில்), மற்றும் ஒரு புதிய மாணவனான சிதம்பரம் (ஜீவா நடிப்பில்) என்ற இரு வேறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் கதையைச் சொல்கிறது.



    Also read... சர்வைவர் ஷோவிலிருந்து வெளியேறிய லேடி காஷ் - நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீது பகீர் புகார்!

    மீனாட்சி மற்றும் சிதம்பரம் ஆகிய இருவருக்கும் இடையே அரும்புகிற உறவை இந்த புரொமோ வெளிப்படுத்துகிறது. பார்வையாளர்களை மிகப்பெரிய அளவில் இது கவர்ந்திழுக்கும் என்பதை இந்த புரொமோ வலுவாக சுட்டிக்காட்டுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: