• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பகத் பாசில்!

விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் கமலுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பகத் பாசில்!

கமல் மற்றும் பகத் பாசில்

கமல் மற்றும் பகத் பாசில்

விக்ரம் படப்பிடிப்பில் கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகத் பாசில் வெளியிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
விக்ரம் படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதியுடன் பகத் பாசிலும் கலந்து கொண்டார். அவர் கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது வைரலாகி வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் தொடங்கியது. அதற்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூவரும் தாடியுடன் இடம்பெற்ற அந்த பர்ஸ்ட் லுக் இந்திய அளவில் பிரபலமானது. ரசிகர்கள் பர்ஸ்ட் லுக்கை உற்சாகத்துடன் பகிர்ந்து வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் கமலுடன், விஜய் சேதுபதி கலந்து கொண்டார். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என சொல்லப்பட்டது.

Also read... விஜய் சேதுபதி முதல் நயன்தாராவரை - ஓடிடியில் வெளியாகும் படங்களின் தொகுப்பு!

இந்நிலையில், விக்ரம் படப்பிடிப்பில் கமலுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகத் பாசில் வெளியிட்டுள்ளார். அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை இந்த செல்பி உறுதி செய்துள்ளது

ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்தியாவின் முக்கியமான மூன்று நடிகர்கள் இடம்பெறும் படம் என்பதால் விக்ரமுக்கு எதிர்பார்ப்பு அதிகமுள்ளது



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: