Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாடல் இன்று ரிலீஸ்!

பொன்னியின் செல்வன் படத்தின் 2-வது பாடல் இன்று ரிலீஸ்!

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.  அதற்கான வேலைகளில் படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகிறது. 

    மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.  அதற்கான வேலைகளில் படக்குழுவினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் படத்தின் பாடல்களை வெளியிட்டு படத்தை பிரபலப்படுத்துகின்றனர்.

    அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான பொன்னி நதி பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். குறிப்பாக youtube சமூக வலைதளத்தில் தமிழ் பதிப்பு மட்டும் சுமார் ஒரு கோடி 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    இந்த நிலையில் பொன்னின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றும் இரண்டாவது பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர். அந்த பாடல் கரிகாலச் சோழன் பற்றியது என அறிவித்துள்ளனர்.

    இந்த பாடலையும் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். முதல் பாடல் போலவே சோழா சோழா என தொடங்குக் இந்த இரண்டாவது பாடலும் நல்ல வரவேற்பை பெறும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.

    Also read... Thiruchitrambalam Movie Review: தனுஷின் திருசிற்றம்பலம் படம் விமர்சனம்!

    தற்போது சிங்கிள் ட்ராக் முறையில் பாடல்கள் வெளியாகி வரும் நிலையில், செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி, அதில் அனைத்து பாடல்களையும் படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

    அந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Ponniyin selvan

    அடுத்த செய்தி