முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வீட்ல விசேஷம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது...!

வீட்ல விசேஷம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது...!

வீட்ல விசேஷம்

வீட்ல விசேஷம்

Veetla Vishesham | வீட்ல விசேஷம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள வீட்ல விசேஷம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த 'Badhaai Ho' படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் போனி கபூர் ரீமேக் செய்துள்ளார்.  அந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி, NJ சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும்  ஜூன் 17-ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் ஆர்.ஜே.பாலாஜி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே தந்தையை மையமாக வைத்து ஒரு பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.  இந்த நிலையில் 'பாப்பா பாட்டு' என்ற தலைப்பில் இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

' isDesktop="true" id="755862" youtubeid="T6fUqure-0c" category="cinema">

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள அந்த படலை பா.விஜய் எழுதியுள்ளார். அதேபோல் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடலை பாடியுள்ளார். இவர் பாடிய முந்தைய பாடல்கள் பெரும் வெற்றியடைந்ததை போலவே, இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது.

தந்தை பாடலை ஆர்.ஜே. பாலாஜி பாடியிருந்தார். முதல் முறையாக அவர் பாடிய அந்தப் பாடலுக்கும்,  அவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன. வீட்டுல விசேஷம் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Also read... ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சூழல் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியீடு

எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படங்களை போல இந்தல் படமும் தனக்கு வெற்றியை கொடுக்கும் என ஆர்.ஜே. பாலாஜி நம்பிக்கையில் உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor sathyaraj, Entertainment, RJ Balaji