Home /News /entertainment /

சூர்யா அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் பாலா படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும்!

சூர்யா அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் பாலா படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும்!

சூர்யா 41

சூர்யா 41

தற்போது சூர்யா தன்னுடைய குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்கிறார்.  அங்கு 20 நாட்கள் தங்குகிறார் எனவும் கூறப்படுகிறது. அந்த சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய உடன் பாலா  திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
நடிகர் சூர்யா அமெரிக்கா சென்று திரும்பியவுடன் பாலா திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். அதற்கு பிறகு அவன் இவன் திரைப்படத்தில் ஒரு சிறிய சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார். அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பாலாவுட நடிகர் சூர்யா இணையாமல் இருந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய 41வது திரைப்படத்திற்கு நீண்ட இடைவேளைக்குப்பின் இயக்குனர் பாலாவின் நடிகர் சூர்யா கைகோர்த்தார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

Also read... சந்திரமுகி 2-க்கு இசையமைக்கும் பாகுபலி இசையமைப்பாளர்!

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகர் சூர்யாவிற்கு இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு நின்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த செய்திகளை நடிகர் சூர்யாவும், அவருடைய தயாரிப்பு நிறுவனமும் மறுத்தது. மேலும் விரைவில் பாலா திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது என நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா தன்னுடைய குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்கிறார்.  அங்கு 20 நாட்கள் தங்குகிறார் எனவும் கூறப்படுகிறது. அந்த சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பிய உடன் பாலா  திரைப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க உள்ளது.  அங்கு சுமார் ஒரு மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்தப்படத்தில் தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Surya

அடுத்த செய்தி