• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • உருவாகிறது தேவர் மகன் 2 - விக்ரம், விஜய் சேதுபதி நடிக்கலாம்!

உருவாகிறது தேவர் மகன் 2 - விக்ரம், விஜய் சேதுபதி நடிக்கலாம்!

தேவர் மகன்

தேவர் மகன்

தேவர்மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே.

  • News18
  • Last Updated :
  • Share this:
தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர். 

1992 இல் கமல், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான படம், தேவர் மகன். மலையாள இயக்குனர் பரதன் இதனை இயக்கியிருந்தார். நாசர், காகா ராதாகிருஷ்ணன், ரேவதி, கௌதமி, தலைவாசல் விஜய், வடிவேலு உள்பட ஏராளமானோர் இதில் நடித்திருந்தனர். சிவாஜியின் யதார்த்த நடிப்பின் மகுடம் தேவர் மகன். கமலே இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அச்சு அசலான தமிழக கிராமத்து வாழ்வியலைச் சொன்ன இந்தப் படம், ஹாலிவுட் காட்ஃபாதர் படத்தின் கதையை தழுவியது என்றால் ஆச்சரியமாக இருக்கும். காட்ஃபாதரில் டானாக வருகிறவர் மார்லன் பிராண்டோ. அவரது எதிரிகள் அவரை சுடடுவிட,, தந்தையின் தொழிலில் துளியும் விருப்பமில்லாத, வெளியூரில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்த இளைய மகன் அப்பாவின் டான் சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பான். மூத்த மகன் எதிரிகளுடன் சேர்ந்து தந்தைக்கு எதிராக செயல்படுவான்.

இந்த கதைச்சட்டகம் அப்படியே தேவர் மகனிலும் இருக்கும். ஊருக்கு பெரியவரான சிவாஜி கணேசன். அவரது குடிகார மகன் தலைவாசல் விஜய். வெளியூரிலிருந்து வரும் இளைய மகன் கமல். ஊரில் இருக்க விருப்பமில்லாத கமல், சிவாஜி கணேசனின் மறைவுக்குப் பின் அவரது இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவரது காதலும்கூட இதனால் முறிந்து போகும். காட்ஃபாதரிலும் இந்த காதல் முறிவு உண்டு.

நிற்க. நம் விஷயத்துக்கு வருவோம். தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும், நாயகனாக விக்ரமும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே கமலின் தயாரிப்பில் (விக்ரம் - கடாரம் கொண்டான், விஜய் சேதுபதி - விக்ரம்) நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Also read... விருது வென்ற சமந்தா... கொண்டாடிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ குழுவினர்!

தேவர்மகன் இரண்டாம் பாகத்தை பகத் பாசிலின் மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளது. கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் எடிட்டரும் இவரே. தேவர் மகனின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. அவர்கள் தேவர் மகன் 2 படத்தில் பணிபுரிய அதிக வாய்ப்புள்ளது.

தேவர் மகன் இரண்டாம் பாகம் குறித்து மலையாள தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கமல் குறிப்பிட்டுள்ளார். ஆகவே தேவர் மகன் 2 உருவாவது நிச்சயம் என்கிறார்கள். தேவர் மகனில் இடம்பெற்ற போற்றிப் பாடடி பெண்ணே பாடல், தமிழக கிராமங்களில் ஆதிக்க சாதியினரின் விருப்பப் பாடலாகி தலித்துகள் அதனை பாட நிர்ப்பந்திக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. சாதி மோதல்களுக்கும் இந்தப் படமும், குறிப்பிட்ட பாடலும் காரணமாக அமைந்தன. அப்படியான அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில் தேவர் மகன் 2 உருவாவது நல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: