Home /News /entertainment /

Scream இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

Scream இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு...!

ஸ்கிரீம்

ஸ்கிரீம்

ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஹாரர் படம் விரும்புகிறவர்கள் ஸ்கிரீம் படத்தைப் பார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
ஸ்கிரீம் என்ற பெயரிலேயே பார்வையாளர்களை அலறவிடும் படம் என்பது புரிந்திருக்கும். இந்த ஹாரர் திரைப்படம் இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்கிரீம் ஹாரர் ஜானரிலேயே கொஞ்சம் வித்தியாசமானது. Slasher film என்பார்கள். ஒரு குடும்பத்தையோ இல்லை ஒரு கும்பலையோ கொலைகாரன் திட்டமிட்டு கொலை செய்வது. திட்டமிட்டு என்றவுடன் அதற்குப் பின்னால் ஏதோ பெரிய பிளாஷ்பேக் இருக்கும் என நினைக்க வேண்டாம். கொலைகாரன் பெரும்பாலும் ஒரு சைக்கோவாக இருப்பான்.

ஸ்கிரீம் முதல் பாகம் 1996 இல் வெளியானது. வெறும் 14 மில்லியன் டாலர்களில் படத்தை எடுத்தனர். யுஎஸ், கனடாவில் மட்டும் 100 மில்லியன் டாலர்களை படம் தாண்டியது. உலக அளவில் 173 மில்லியன் டாலர்கள். தங்க முட்டையிடும் வாத்தை கண்ட சந்தோஷத்துடன் இரண்டாம், மூன்றாம் பாகங்களை எடுத்தனர். 2000 இல் வெளியான மூன்றாம் பாகம் படத்தில் வரும் கொலைகாரனைவிட அதிகம் சோதித்தது. அத்தோடு ஊற்றி மூடுவார்கள் என்றுதான் எண்ணினர். ஆனால் 2011 இல் நான்காவது பாகத்தை எடுத்தனர். இந்த வருடம் ஜனவரி 14 யுஎஸ்ஸில் வெளியாகியிருக்கும் ஸ்கிரீம் ஐந்தாவது பாகம்.

Also read... நெட்பிளிக்ஸில் கொரிய தொடர்களின் படையெடுப்பு...!

இதில் ஆச்சரியமான விஷயம், படம் அங்கு ஹிட். முதல்வார இறுதியில் 30 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. உலக அளவில் இப்போதே 50 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது. இன்னும் பல நாடுகளில் படம் விரைவில் வெளியாக உள்ளது. சென்ற வார யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இந்த ஹாரர் படம் முதலிடத்தைப் பிடித்து ஆறாவது பாகத்துக்கு வழிவகுத்துள்ளது.

ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஹாரர் படம் விரும்புகிறவர்கள் ஸ்கிரீம் படத்தைப் பார்க்கலாம். இந்தியாவில் ஜனவரி 26 ஆம் தேதி படம் வெளியாகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி