முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குற்றப் பரம்பரை இணைய தொடரை ஹாட்ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை

குற்றப் பரம்பரை இணைய தொடரை ஹாட்ஸ்டாரில் வெளியிட பேச்சுவார்த்தை

சசிகுமார்

சசிகுமார்

சசிகுமார் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் குற்றப் பரம்பரை இணைய தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சசிகுமார் இயக்கவுள்ள குற்றப் பரம்பரை இணைய தொடர்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. அந்தத் தொடரை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் தயாரிக்க உள்ளது.

சுப்ரமணியபுரம், ஈசன் ஆகிய படங்களை இயக்கிய சசிகுமார் அதன் பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.  இயக்கத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டாலும் தொடர்ந்து, நடிப்பிற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

இதன் காரணமாக திரைப்படம் இயக்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் தற்போது வேலராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை நாவலை இணைய தொடராக சசிகுமார் இயக்க உள்ளார்.

அதில் நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார். இதற்கான செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகின.

Also read... கனல் கண்ணன் ஜாமீன் மனு குறித்து சென்னை காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில் குற்றப்பரம்பரை இணைய தொடர்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தகவல் வெளியாகி உள்ளது. அந்த இணைய தொடருக்கு சசிகுமாரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்வார் என கூறப்படுகிறது.

அதைப்போல் இசையமைப்பாளர் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் தேர்வு இன்னும் நடைபெறவில்லை. சசிகுமார் இயக்கும் குற்றப்பரம்பரை இணையத்தொடரை ஹாட் ஸ்டார் ஓ.டி.டி தளம் தயாரிக்க உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Sasikumar, Entertainment