• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இந்த வாரமும் ஏமாற்றிய திரைப்படங்கள்...!

இந்த வாரமும் ஏமாற்றிய திரைப்படங்கள்...!

தியேட்டர்

தியேட்டர்

இந்த வாரமும் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களை ஏமாற்றி உள்ளதால் ரசிகர்களை திரையரங்கை நோக்கி ஈர்க்கும் திரைப்படங்களான அண்ணாத்த,வலிமை போன்ற பெரிய திரைப்படங்களுக்காக திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கடந்த வாரம் வெளியான லாபம் தலைவி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை திரையரங்கை நோக்கி இழுக்காத நிலையில் இந்த வாரமும் அதே நிலை தொடர்கிறது.

    ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளன. கடந்த வாரம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வெளியான தலைவி ஆகிய திரைப்படங்கள் ஓரளவு திரையரங்கிற்கு மக்களை அழைத்து வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் லாபம் திரைப்படம் நல்ல கருத்துக்களை பிரச்சாரம் நெடியுடன் எடுத்து வைத்ததால் ரசிகர் கூட்டத்தை கவர தவறியது. இதேபோல தலைவிதி திரைப்படமும் எதிர்பார்த்த எந்த ஒரு தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

    இந்த நிலையில் நீண்ட நாட்களாக திரையரங்கில் வெளியாக காத்துக்கொண்டிருந்த விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான கோடியில் ஒருவன் மற்றும் ஹர்பஜன் சிங் அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய பிரண்ட்ஷிப் ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்தன.



    மெட்ரோ திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் என்பதால் கோடியில் ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படிப்பின் மீது ஆர்வம் கொண்டு மாவட்ட ஆட்சியாளராக போராடி வரும் விஜய் ஆண்டனி கதாபாத்திரம் ரவுடியிசம், அரசியல் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டு பின்னர் அரசியல்வாதியாகி வெற்றி பெறுவது போல இந்த திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

    காட்சிக்கு காட்சி சண்டை, நம்பமுடியாத திருப்பங்கள் என தெலுங்கு திரைப்படத்தின் நெடியுடன் உருவாகியுள்ளதால் கோடியில் ஒருவன் திரைப்படம் தமிழ் ரசிகர்களை போராடி வருகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு மார்க்கெட்டில் விஜய் ஆண்டனிக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளதால், தெலுங்கு ஆக்ஷன் மசாலா சற்று கூடுதலாக இருக்கும் படி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது, தமிழில் படத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.



    ஹர்பஜன் சிங் நாயகனாக அறிமுகமாகி உள்ள பிரண்ட்ஷிப் திரைப்படம் வழக்கமான கல்லூரி நட்பிற்குள் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண்களின் சுதந்திரம் ஆகியவற்றை பேச முயற்சி செய்துள்ளது. படத்தின் காட்சிகளை எளிமையாக கணிக்கும் படி இந்த திரைப்படம் உருவாகி உள்ளது படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. படத்தின் இறுதி காட்சி அப்படியே நேர்கொண்டபார்வை திரைப்படத்தை நினைவூட்டுவது அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. நடிப்பும் லிப்ஸிங்கும் இல்லாமல் எதற்காக ஹர்பஜன் சிங்கை இந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுகிறது.

    Also read... இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள்...!

    இப்படி இந்த வாரம் வெளியான இரண்டு திரைப்படங்களுமே சொதப்ப ஹாட்ஸ்டார் வலைதளத்தில் விஜய்சேதுபதி டாப்ஸி ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குனர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தரராஜன் நாயகனாக அறிமுகமாகி உள்ள அனபெல் சேதுபதி திரைப்படம் வெளியாகி உள்ளது.



    திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் சொதப்பியதால் இந்த திரைப்படமாவது ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்த்தால் ஏற்கனவே தமிழில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற மற்றும் பெட்ரமாக்ல் ஆகிய திரைப்படங்களில் கதையை இன்னும் சுமாராக சிரிப்பே வராத மொக்கை நகைச்சுவை காட்சிகளுடன் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி சிறிது நேரம் மட்டுமே வரும் இந்த திரைப்படத்தில் படத்தில் சேதுபதி அதிகம் வருவதில்லை என்பதால் படத்தின் பெயரை சேதுபதி என வைத்துள்ளதாக ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு மிகவும் குறைவான காட்சிகளில் மட்டுமே விஜய் சேதுபதி தோன்றுகிறார்.

    இதன் காரணமாக அவர் ரசிகர்களுக்கும் திருப்தியில்லாத திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஆக மொத்தம் இந்த வாரமும் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களை ஏமாற்றி உள்ளதால் ரசிகர்களை திரையரங்கை நோக்கி ஈர்க்கும் திரைப்படங்களான அண்ணாத்த,வலிமை போன்ற பெரிய திரைப்படங்களுக்காக திரையரங்கு உரிமையாளர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: