முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கேஜிஎஃப் சேப்டர் 2 உடன் மோதும் லாரன்சின் ருத்ரன்!

கேஜிஎஃப் சேப்டர் 2 உடன் மோதும் லாரன்சின் ருத்ரன்!

ருத்ரன்

ருத்ரன்

ஆக்ஷன் படமாக தயாராகும் ருத்ரனுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

ராகவா லாரன்ஸ் படங்களுக்கு தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. காஞ்சனா சீரிஸ் ஏற்படுத்தித் தந்த அதிர்ஷ்டம் இது. காஞ்சனா 3 படத்துக்குப் பிறகு லாரன்ஸ் நடித்துவரும் படங்களுள் ஒன்று ருத்ரன். இது கேஜிஎஃப் சேப்டர் 2 படத்துடன் மோதுகிறது.

இந்த வருடம் ஜனவரியில் ருத்ரன் படத்தை தொடங்கினார்கள். 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் இந்தப் படத்தை தயாரிப்பதுடன் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். திருமாறன் படத்தின் கதையை எழுதியுள்ளார். நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அத்துடன் சரத்குமார், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஆக்ஷன் படமாக தயாராகும் ருத்ரனுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, ஆர்.டிராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படத்தை 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். அன்றுதான் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படமும் வெளியாகிறது.

Also read... பிஸியாகும் சிம்பு... தொடங்கியது பத்து தல படப்பிடிப்பு...!

கேஜிஎஃப் கன்னட படமாக இருப்பினும், அதன் முதல் பாகம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் சூப்பர்ஹிட்டானது. இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் இந்தப் படத்துடன் ருத்ரன் மோதுவது சாதாரணமில்லைகடைசிநேரத்தில் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்படலாம்.

First published:

Tags: Actor Raghava lawrence