• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள் - மகிழ்ச்சியில் உரிமையாளர்கள்!

திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள் - மகிழ்ச்சியில் உரிமையாளர்கள்!

திரையரங்கு

திரையரங்கு

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், மற்றும் தலைவி ஆகிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களை திரையரங்கை நோக்கி இழுக்கும் எனக் கணக்கிட்டாலும் அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பலனளிக்கவில்லை.

  • Share this:
    திரையரங்குகளை நோக்கி மீண்டும் மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது திரையரங்க உரிமையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ரசிகர் கூட்டம் திரையரங்கை நோக்கி படை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த முறை திரையரங்குகள் ஊரடங்கு முடிந்து மீண்டும் திறக்கப்பட்டபோது விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் படை எடுத்ததோடு திரையரங்குகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப காரணமாக அமைந்தது.

    இதனைத் தொடர்ந்து கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரும் வசூல் குவித்தது. இந்நிலையில் மீண்டும் திரையரங்குகள் இரண்டாவது அலை காரணமாக மூடப்பட்டது. ஏறத்தாழ 150 நாட்கள் கழித்து திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, ஆரம்பத்தில் ரசிகர்கள் திரையரங்கை நோக்கி வர தயக்கம் காட்டினர். இதற்கு ரசிகர்களை திரையரங்கை நோக்கி ஈர்க்கும் திரைப்படங்கள் எதுவும் வராதது முக்கிய காரணமாக அமைந்தது.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம், மற்றும் தலைவி ஆகிய திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களை திரையரங்கை நோக்கி இழுக்கும் எனக் கணக்கிட்டாலும் அது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பலனளிக்கவில்லை. எனினும் ஹாலிவுட் திரைப்படங்கள் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், சாங் சி, உள்ளிட்ட திரைப்படங்கள் ஓரளவு ஆறுதலாக அமைந்தது.

    இந்நிலையில் அண்மையில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள சிவகுமாரின் சபதம் வெளியாகி இளம் ரசிகர்களை திரையரங்கை நோக்கி படையெடுக்க வைத்து உள்ளது. மேலும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான நோ டைம் டு டை திரைப்படமும் பெரும்பாலான ரசிகர்கள் மீண்டும் திரையரங்கை நோக்கி படை எடுத்து முக்கிய காரணமாக உள்ளது. மீண்டும் திரையரங்குகள் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது பெரு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கிறார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

    அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் டாக்டர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய திரைப்படங்கள் மீண்டும் திரையரங்குகளை திருவிழா கோலம் பூண செய்யும் என்ற நம்பிக்கை திரையரங்க உரிமையாளர்களின் கண்களில் வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: