ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! இடம்விடாத பொன்னியின் செல்வன்! தள்ளிப்போகும் தமிழ் படங்களின் ரிலீஸ்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகள்! இடம்விடாத பொன்னியின் செல்வன்! தள்ளிப்போகும் தமிழ் படங்களின் ரிலீஸ்!

பொன்னியின் செல்வன், காபி வித் காதல்

பொன்னியின் செல்வன், காபி வித் காதல்

பொன்னின் செல்வனை பார்க்க நாளுக்கு நாள் அதிக அதிகரித்தே வருகிறது. இதனால் தீபாவளி வரை பொன்னியின் செல்வன் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதால், இந்த வாரம் வெளியாக வேண்டிய படங்களில் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

அத்துடன் பொன்னின் செல்வனை பார்க்க நாளுக்கு நாள் அதிக அதிகரித்தே வருகிறது. இதனால் தீபாவளி வரை பொன்னியின் செல்வன் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த வாரம் வெளியாகவிருந்த படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய் - ஜீவா  உள்ளிட்டோர் நடித்துள்ள Coffee With காதல் படம் வெளியாகவிருந்தது. இதற்கான புரமோஷன் வேலைகளும் மும்முரமாக நடைபெற்றன.

Also read... சினிமாவின் மேஜிக்! படம் பிளாப்.. ஆனால் பலரையும் உச்சிக்கு கொண்டுசென்ற 'ஆல்பம் ' படம்!

இதனால் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டர் சுந்தர்.சி. ஆனால் அவர் நினைக்கும் எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே Coffee with காதல் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளனர். அதும் நவம்பர் மாதம் படத்தை வெளியிடுவது என முசிவெடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Ponniyin selvan