Home /News /entertainment /

தள்ளிச் செல்கிறது பிசாசு-2 திரைப்படத்தின் வெளியீடு!

தள்ளிச் செல்கிறது பிசாசு-2 திரைப்படத்தின் வெளியீடு!

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

பிசாசு-2 திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்த பிறகு படத்தை வெளியிடலாம் என பட குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கி இருக்கும் பிசாசு-2 திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச் செல்கிறது. 

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிசாசு 2.  இந்த திரைப்படத்தை ராக்போர்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்திருக்கிறார்.

திகில் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.  அதற்கான வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.

மேலும் பிசாசு-2 திரைப்படத்தை தணிக்கை குழுவினர் அனுப்பி இருந்தனர். அந்தப் படத்தை பார்த்த பட குழுவினர் 'ஏ' சான்றிதழ் வழங்கினர்.  இதனால் சில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழுக்காக தயாரிப்பு நிறுவனம் மீண்டும் தணிக்கைக்கு அனுப்புகிறது. பிசாசு-2 திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்த பிறகு படத்தை வெளியிடலாம் என பட குழு திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also read... துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கவுதம் மேனன் வெளியிட்ட அப்டேட்!

இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் 31ஆம் தேதி படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வேறு தேதியை இறுதி செய்யும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Andrea Jeramiah, Director mysskin, Entertainment

அடுத்த செய்தி