அஜித்தின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 வெளியாவதால் தனுஷின் மாறன் திரைப்படம் பிப்ரவரி 25-க்கு பதில் வேறு தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
தனுஷின் ஜகமே தந்திரம், இந்தி படம் அத்ரங்கி ரே இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதனை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் மாறன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதனை படத்தை தயாரித்திருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படத்தில் தனுஷுடன் மாளவிகா மோகனன், ஸ்ம்ருதி வெங்கட், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்தனர். திரில்லர் திரைப்படமாக இது தயாராகி உள்ளது.
இந்தப் படம் ஜனவரியில் வெளியாகும் என்றனர். பிறகு பிப்ரவரி முதல் வாரத்திற்கு பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின் பிப்ரவரி 25 வெளியாகும் எனறனர். இந்நிலையில் அந்த தேதியிலும் படம் வெளியாகப் போவதில்லை என உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also read... அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை...!
பிப்ரவரி 24ஆம் தேதி அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதால் வலிமைக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. எனினும் சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்தை வைத்து படம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டு இருப்பதால் அஜித் படம் வெளியாகும் நேரத்தில் தங்களது படத்தை வெளியிடாமல் தள்ளி வைத்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Actor dhanush, Valimai