ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சிக்கலில் சசிகுமாரின் ராஜவம்சம்...!

சிக்கலில் சசிகுமாரின் ராஜவம்சம்...!

ராஜவம்சம்

ராஜவம்சம்

சசிகுமார் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் மற்றொரு திரைப்படம் ராஜவம்சம். அக்டோபர் 1 ஆம் படம் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால், வெளியாகவில்லை.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சசிகுமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படங்களில் ஒன்று ராஜவம்சம். இரண்டாவது முறையாக இதன் வெளியீட்டு தேதி தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குட்டிப்புலிக்குப் பிறகு பி, சி சென்டர்களில் நல்ல வசூல் தரும் நடிகராக சசிகுமார் இருந்தார். ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அடாவடித்தனத்தை பிரதிபலிக்கும் கதையில் தொடர்ச்சியாக நடித்து அவரே அந்த வசூலை கெடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டம். ஹாட் கேக்காக விற்கப்பட்ட அவரது படங்கள் காய்ந்த ரொட்டியாக சீண்ட ஆளில்லாமல் மாறின. அந்த ராசி இன்னும் தொடர்கிறது

சசிகுமார் நடிப்பில் கடைசியாக 2020 இல் நாடோடிகள் 2 வெளியானது. அதன் பிறகு அவர் நடித்தப் படங்களில் எம்ஜிஆர் மகன் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மார்ச்சில் படம் வெளியாகும் என்ற அறிவித்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படம் தள்ளிப்போனது. இன்றுவரை அந்தப் படத்துக்கு ஒரு மாற்று தேதியை தயாரிப்பாளர்களால் அறிவிக்க முடியவில்லை

சசிகுமார் நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் மற்றொரு திரைப்படம் ராஜவம்சம். அக்டோபர் 1 ஆம் படம் வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால், வெளியாகவில்லை. பிறகு அக்டோபர் 14 வருகிறோம் என்று விளம்பரத்தோடு அறிவித்தனர். அன்றைய தேதியிலும் படம் வெளியாவது கடினம் என்கின்றன செய்திகள்

Also read... 25 கோடிக்கு டாக்டர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி...!

இவை தவிர கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. ஆனால் எப்போது படங்கள் வெளியாகும் என்பதுதான் யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது. படத்தை வாங்க யாரும் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம். மேலே சொன்ன படங்களுக்குப் பிறகு சசிகுமார் நடித்தப் படம் உடன்பிறப்பே. சரவணன் இயக்கத்தில் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகியிருக்கும் இந்தப் படம் ஆயுதபூஜைக்கு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு என்பதால் சிக்கலில்லாமல் வெளியாகிறது

சசிகுமார் நடித்திருக்கும் ஏதாவது ஒரு படம் திரையரங்கில் வெளியானால்தான், தேங்கி நிற்கும் மற்ற படங்களும் வெளியாகும், அவரது மார்க்கெட்டும் புத்துணர்ச்சி பெறும்.

First published:

Tags: Actor Sasikumar, Director sasikumar