Home /News /entertainment /

பாடகர் கே.கே. மரணத்திற்கு இதுதான் காரணம்!! பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளிவந்தது

பாடகர் கே.கே. மரணத்திற்கு இதுதான் காரணம்!! பிரேத பரிசோதனை ரிப்போர்ட் வெளிவந்தது

பாடகர் கேகே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்.

பாடகர் கேகே. என்கிற கிருஷ்ணகுமார் குன்னத்.

Singer KK : பிரபல பாடகர் கேகேவின் மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது முழுவிபரம் தெரியவந்துள்ளது. அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயற்கைக்கு முரணான மரணம் என்று அவரது மரணம் தொடர்பான வழக்கில் போலீசார் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. பிரபல பாடகரான கிருஷ்ண குமார் குன்னத் எனும் கே.கே. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பின்னணி பாடகராக இருந்து வருகிறார். மிகவும் துடிப்பு மிக்க நபரான அவர் கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியின்போது பங்கேற்று பாடினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர். இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே அமர்வதற்கு வசதிகள் உள்ளதாகவம், அதில் நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேகேவின் இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின்போது அவர் அதிக உற்சாகம் அடைந்ததால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபட்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிபிஆர் சிகிச்சையை கேகேவுக்கு உடனடியாக அளித்திருந்தால் அவர் பிழைத்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு என்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பிரபல பாடகர் கேகேவின் மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது முழுவிபரம் தெரியவந்துள்ளது. அவரது மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவமனை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

    இயற்கைக்கு முரணான மரணம் என்று அவரது மரணம் தொடர்பான வழக்கில் போலீசார் குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.

    பிரபல பாடகரான கிருஷ்ண குமார் குன்னத் எனும் கே.கே. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பின்னணி பாடகராக இருந்து வருகிறார்.

    இதையும் படிங்க - மீண்டும் தொடங்கியது ரஜினி - கமல் படங்களுக்கு இடையே வசூல் போட்டி

    மிகவும் துடிப்பு மிக்க நபரான அவர் கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியின்போது பங்கேற்று பாடினார். அப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இதையும் படிங்க - ஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடித்துள்ள 'கோல்மால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    இதனால் இந்த விவகாரத்தில் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் 3 ஆயிரம் பேர் மட்டுமே அமர்வதற்கு வசதிகள் உள்ளதாகவம், அதில் நிகழ்ச்சி நடைபெற்ற போது 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேகேவின் இதயத்திற்கு செல்லும் கரோனரி தமனியில் 80 சதவீத அடைப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின்போது அவர் அதிக உற்சாகம் அடைந்ததால் இதயத்திற்கு செல்லும் இரத்தம் தடைபட்டு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிபிஆர் சிகிச்சையை கேகேவுக்கு உடனடியாக அளித்திருந்தால் அவர் பிழைத்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு என்றும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Cinema

    அடுத்த செய்தி